விஷ்ணு – விஜய்சேதுபதி கூட்டணிக்கு ‘U’ சான்றிதழ்..!

சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. விஷ்ணு, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா, நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தபடத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் சென்சாருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘UU’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆக, இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு முதல் வாரத்தில் இந்தப்படம் வெளியாகலாம என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.