“சூப்பர்ஸ்டார் பட்டத்தை நான் விரும்பவில்லை” ; ஸ்பைடர்’ நாயகன் மகேஷ்பாபு அதிரடி..!

mahesh babu

தெலுங்கு சூப்பர்ஸ்டார், ஆந்திர சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு முதன்முறையாக ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் நேரடியாக களம் இறங்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் செப்-27ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘ஸ்பைடர்’ படக்குழுவினர்.

இந்த நிகழ்வில் மகேஷ்பாபுவிடம், “தெலுங்கில் உங்களை சூப்பர்ஸ்டார், பிரின்ஸ் என பட்டம் கொடுத்து அழைக்கும்போது, தமிழில் அதை வேண்டாம் என சொல்லிவிட்டீர்களாமே என கேட்டதற்கு, அங்கேயும் கூட பட்டம் போடவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்” என கூலாக பதில் சொன்னார் மகேஷ்பாபு..

தமிழில் யாரையும் போட்டியாக நினைத்துக்கொண்டு களத்தில் இறங்கவில்லை என கூறிய மகேஷ்பாபு, தெலுங்கு தமிழ், இரண்டுக்கும் ஏற்ற மாதிரி கதை அமையும் பட்சத்தில், தமிழ்சினிமாவில் தொடர்ந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஸ்பைடர் படம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இதயத்துடிப்பு பத்து தடவை கூடுதலாக துடிப்பதாகவும் கூறினார் மகேஷ்பாபு.

இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத் இருவரும் நெகடிவ் கேரக்டர்களில் நடிக்க, கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுகிறது.