“கீழே விழுற தப்பை இனி பண்ண மாட்டேன்” – ஷாம்

 

‘6 மெழுகுவர்த்திகள்’ படம் மூலம் கிடைத்த நல்லபெயரை தக்கவைத்துக் கொள்வதற்காகவே கவனமாக படங்களை தேர்வு செய்த ஷாம், மோசமான கதைகளை ஒதுக்கினார். அதனால் இடைவெளி விழுந்தாலும் பரவாயில்லை என முடிவுடன் இருந்தவருக்கு வரப்பிரசாதமாக ‘புறம்போக்கு’ படத்தில் மெக்காலே கதாபாத்திரம் அமைந்துவிட்டது. படத்தை பார்த்த யாருமே ஷாமை பாராட்ட தவறேவேயில்லை..

“நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன இன்றைய போட்டி நிறைந்த சினிமா சூழலில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்து நிற்பது பெரிய விஷயம்தான் . பெருமையாக இருக்கிறது.  கை தூக்கிவிட யாருமில்லை. ஆனால் கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க.. நானாகத்தான் சரியா தப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன். இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா? நடிக்கலைன்னா கூட பரவாயில்லை.   தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது.” என தீர்க்கமாக பேசுகிறார் ஷாம்.

தற்போது ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார் ஷாம். இந்தப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகி வருகிறது. சென்னை, பெங்களூர் என்று மாறிமாறி இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தில் ஷாமின் கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனம் கலந்தது மாதிரி இருக்குமாம்.