“அஜித் படத்தில் நான் இல்லை”- ஆதி

கௌதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடித்துவரும் பெயரிடப்படாத அவரது 55வது படத்தில் அருண்விஜய்யும் ஆதியும் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி சில நாட்களாகவே மீடியாவிற்கு தீனி போட்டு வந்தது. அருண்விஜய் இந்த செய்தியை ஒப்புக்கொண்ட நிலையில், நடிகர் ஆதி மட்டும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

“நான் அஜித்தின் தீவிர ரசிகன். முதல் நாள் முதல் ஷோ அது எந்த நேரமானாலும் பார்த்துவிடுபவன்.. ஆனால் தற்போது அஜித்தின் படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ஆனால் எனக்கு அழைப்பு வந்தது உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால் தான் நடிக்கவில்லை” என கூறியுள்ளார் ஆதி.