கமல் படத்தை நான் இயக்குகிறேனா..? அதிர்ச்சியில் ஆதிக்..!

I Am Not Directed Kamal Film Said By Aadhik
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படம் சர்ச்சைகளையும் முணுமுணுப்புகளையும் எழுப்பினாலும் படம் வெற்றிப்படமாகிவிட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமாக உலகநாயகன் கமலை சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார்.

அவருடன் படத்தின் முக்கியமான டெக்னீசியன்களும் உடன் சென்றிருந்தனர்.. ஆனால் கமலை சந்தித்து விட்டு வந்தபின், கமலுக்கு ஆதிக் கதை சொல்லியிருக்கிறார் என்றும், அவரது அடுத்த படத்தில் கமலை இயக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாக, அதிர்ச்சியான ஆதிக், இதற்கு உடனே மறுப்பு தெரிவித்துள்ளார்..

“எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல் ஹாசன் அவர்களின் ஆசி பெற அனுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும். இந்த செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார் ஆதிக்.