“நான் ரோபோ இல்லை” ; எமி ஜாக்சன்

amy-jackson1
ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் இருவருடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்ட நடிகை எமி ஜாக்சன்.. இதில் ‘தெறி’யை முடித்துவிட்டு, தற்போது ரஜினியுடன் ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார் எமி.. இந்தப்படத்தில் இவருக்கு ரோபோ வேடம் என சில நாட்களாக ஒரு தகவல் உலா வந்துகொண்டு இருக்கிறது.

ஆனால் இந்தப்படத்தில் தான் ரோபோவாக நடிக்கவில்லை என மறுத்துள்ளராம் எமி ஜாக்சன். இருந்தாலும் யாராலும் யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் தான் நடித்துவருவது வேண்டுமானால் ஓரளவுக்கு உண்மை என தனது கேரக்டரை பற்றிய ஹின்ட்டும் கொடுத்துள்ளாராம்.