‘மகளிர் மட்டும்’ பட்டுப்புடவை பரிசால் பெண்கள் இன்ப அதிர்ச்சி..!

magalir mattum silk saree gift contest

ஜோதிகா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும்’ இந்தப்படம் மக்களிடம் குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

‘மகளிர் மட்டும் படக்குழுவினர் ‘ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டுப்புடவை’ என்ற திட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த பெண்களுக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது..

மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்கில் காண வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்படுகிறது. பட்டுப்புடவை பரிசு வென்றவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.