ஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..!

அப்பா நடிகர் என்றால் மகனுக்கு சினிமாவில் நுழைய வாய்ப்புதான் எளிதாக கிடைக்குமே தவிர, ரசிகர்களை கவரவேண்டிய நடிப்பை வழங்குவதும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிலைநிறுத்தி கொள்வதும் மகன்களின் கையில் தான் இருக்கிறது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தன் கார்த்தி..

இந்த ரோலில் தான் நடிக்கவேண்டும் என தன்னைச்சுற்றி வட்டம் எதுவும் போட்டுக்கொள்ளாமல், இயக்குனர்களை நம்பி தன்னை முழுதாக ஒப்படைக்கும் கார்த்தியின் அந்த துணிச்சல் தான் இன்றும் ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’ என அவருக்கு வரிசையாக வெற்றி மாலைகளை சூட்டி வருகிறது.

தற்போது ‘காஷ்மோரா’ மற்றும் தமிழ், தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்கும் படம் என இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் கார்த்தி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்திக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.