ஐநூறில் ஒருத்தியான ‘அதிதி பாலன் ; அருவி’ தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய கதை..!

aruvi heroine adithi balan

ஆயிரத்தில் ஒருத்தி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதென்ன ஐநூறில் ஒருத்தி என்கிறீர்களா..? அவர் வேறு யாருமல்ல வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘அருவி’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் தான்.. இவர் எப்படி ஐநூறில் ஒருத்தியாக மாறினார் என்கிற கதையை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார் படத்தை தயாரித்துள்ள எஸ்.ஆர்.பிரபு

“உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இந்த ‘அருவி’ தான்.

அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் அருண்பிரபு ஆடிசன் செய்தார். ஒருகட்டத்தில் “நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக ஆடிசன் செய்கிறீர்களா ? அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று ஆடிசன் செய்கிறீர்களா என்று இயக்குனரிடம் கூட கேட்டே விட்டேன் அப்படி தேர்ந்தேடுத்தவர்தான் இந்த அதிதி பாலன்” என்று கதாநாயகி உருவான கதை கூறினார் எஸ்.ஆர்.பிரபு.

இந்தப்படத்தின் இயக்குனர் இயக்குநர் அருண் பிரபு குருக்களான இயக்குநர் பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படத்தை பற்றி அவர் கோரும்போது, “அருவி’ மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும்” என்றார்.