ஹாலிவுட் டெக்னீசியன்கள் கைவண்ணத்தில் ‘சைவம்’..!


மாஸ் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி இருந்தாலும் டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் கனவுப்படம் என்றால் தற்போது அவர் இயக்கியுள்ள ‘சைவம்’ படம் தான். இந்தப்படம் தனக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய்.

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய மார்ட்டி ஹம்ப்ரே, க்ரிஸ் ஜேக்கப்ஸன் என இரண்டு சவுண்ட் இன்ஜீனியர்கள் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இதற்கு முன் இவர்கள் இருவரும் கமலின் விஸ்வரூபம் படத்திலும் பணியாற்றியவர்கள். பல ஹாலிவுட் படங்களை பார்த்த இவர்களுக்கு சைவம் படத்தில் பணியாற்றியது புதுவித அனுபவமாக இருந்ததாம்.