மனோபாலா ஸ்டைலில் கமென்ட் அடித்த ஹாலிவுட் டைரக்டர்.!

 

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்தில் சந்தானமும் மனோபாலாவும் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள். இதில் உயர் அதிகாரியான மனோபாலா, எஸ்.ஐ.யான சந்தானம செய்யும் குளறுபடிகளால் இரண்டுமுறை, பிடிபட்ட தீவிரவாதி ஒருவனை தவறவிட்டு விடுவார்..

மூன்றாவது முறை அவன் பிடிபட்டதும், மீடியாக்களிடம் இவன் பிடிபட்டதற்கு சந்தானம் தான் காரணம் என கூறுவார். அதாவது இரண்டு முறை சந்தானம் இருந்ததால் பிடிக்க முடியவில்லை என்றும் மூன்றாவது முறை அவர் இல்லாததால் ஈஸியாக பிடித்துவிட்டோம் என்றும் சந்தானத்தை கலாய்த்திருப்பார்.

இதே ஸ்டைலில் தான் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனும் மீடியாவின் கேள்விக்கு பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.. உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது ‘ஸ்மார்ட் போன்’ தான் என கூறியுள்ள நோலன், அதற்கு வித்தியாசமான காரணத்தையும் கூறியுள்ளார்..

“எனக்கு நிறைய ஸ்மார்ட் போன்கள் அன்பளிப்பாக வருகின்றன. அவற்றை எல்லாம் பயன்படுத்த ஆரம்பித்தால் ஒவ்வொரு போனும் தினசரி எனது பத்து நிமிடங்களை விழுங்கிவிடும். அதனால் நான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதே இல்லை. இதனால் மிச்சப்படும் நேரத்தில் நிறைய யோசிக்க முடிகிறது” என மறைமுகமாக ஸ்மார்ட் போனை கிண்டலடிக்கும் விதத்தில் நன்றி கூறியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.