சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி..!

siva-hip hop adhi

இயக்குனர் எம்.ராஜேஷ் டைரக்சனில் சிவகார்த்திகேயன் –நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ள படம் அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இது சிவகார்த்திகேயனின் 13வது படம். கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார்.

“இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதியை நம்பிக்கையோடு அணுகினோம். கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டார். சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். அவர்களுக்கும் ஹிப் ஹாப் ஆதியை பிடிக்கும் என்பதால் இந்த கூட்டணியின் வெற்றி நிச்சயம் பெரிதாக இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைப் பெற்று வருகிறது