கண்ணீர்விட வைக்கும் ஹை-வோல்டேஜ் பர்பாமான்ஸ்..?

என்னை அறிந்தால் படத்தை பார்த்துவிட்டு சில காட்சிகளில் கண்கள் குளமாகிவிட்டது என்கிறார் ஒருவர்.. காரணம் படத்தில் நடித்துள்ளவர்களின் ஹை-வோல்டேஜ் பர்பாமான்ஸ் தானாம்.. ஹலோ.. இன்னும் படமே ரிலீஸ் ஆகலையே, அப்புறம் யார் அழுததுன்னு கேட்குறீங்களா..? வேறு யாருமில்லை.. மதன்கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி தான் அந்த நபர்..

இந்தப்படத்தின் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் எழுதும் பணியை அவர்தான் செய்திருக்கிறார். ஒரு மனிதனின் நேர்மையை அற்புதமான முறையில் அருமையான திரைக்கதையாக நெய்திருக்கிறார்கள் என்றும் இந்த வாய்ப்பை தந்த கௌதம் மேனனுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி என ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் நந்தினி.