புகை-மது காட்சிகள் இல்லாமல் ஒரு படம்..!

hello mic testing

வேறு வழியில்லை. வித்தியாசமாக ஏதாவது டைட்டில் வைத்தால் தான், ரசிகர்களின் கவனத்தை கவர முடியும் என்று ரூம் போட்டு யோசிக்கிறார்கள் கோடம்பாக்கம் படைப்பாளிகள் சிலர்.. அப்படி ஒரு படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் தான் ‘வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3’.

இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். அறிமுக கதாநாயகியாக ஹர்ஷிதா என்பவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் படத்தில் இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகித்ஸ்வா, வம்சிகிருஷ்ணா, ஆர்.என்.ஆர். மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோஷன். சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும்..? அது தான் இந்தப்படத்தின் கதைக்களம்.

அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக நடித்துள்ளார் ரோஷன்.

அரசியல் கட்சி கூட்டங்களு​​க்கு மைக் செட் போடும் போது சில பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும். அந்த பிரச்சனைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்குமாம். படத்தில் பிரதமர் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளார்களாம். இன்னொரு சிறப்பம்சம் படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாதாம்.