அதர்வா படத்தில் அறிமுகமாகும் யூடியூப் ஹரிஜா..!

harija - atharva

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் விஸ்காம் படித்தவர் ஹரிஜா. படிப்பு முடித்துவிட்ட தனது நண்பரான விஜயுடன் எருமசாணி என்ற சேனலை தொடங்கினார். இன்றைய சூழலில் யூ டியூப் பிரபலங்கள் சினிமாவிற்குள் நுழைவது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அந்தவகையில் பல லட்சம் இளைஞர்களை கவர்ந்த ஹரிஜா தற்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஆம். சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சி.எஸ் இசையில் ஆராஸ் தயாரிப்பில் தயாரிப்பில் இந்த படம் உருவாகின்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஹரிஜா பேசுகையில், “சினிமாவில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தபொழுது தான் இந்த படம் எனக்கு கிடைத்தது. சுமார் இரண்டு வாரங்கள் எனது படப்பிடிப்பு நடந்தது. சாம் ஆண்டன் மற்றும் அதர்வாவுடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாகும். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் உற்சாகமாக இருந்தது. எனது கதாபாத்திரத்தையும் இந்த படத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் ”