இயக்குனர் ஹரிக்கு பதில் மரியாதை செய்த சூர்யா..!

surya presents a car to hari 1

ஒரு படத்தின் மூன்றாம் பாகமெல்லாம் தமிழ் சினிமாவில் உருவாக முடியுமா என்கிற நிலைமையை மாற்றிக்காட்டி சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வெளியிட்டதுடன் படத்தை சூப்பர்ஹிட்டும் ஆக்கிவிட்டார் இயக்குனர் ஹரி.. நூறு கோடி ரூபாய் வசூல் என்கிற இலக்கை விரைவிலேயே தொட்டுவிடும் விதமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது ‘சி-3’.

கடந்த இரண்டு மாதங்களில் இயற்கையாக ஏற்பட்ட பல தடைகளையும் தாண்டி, இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ஹரியின் ஈடு இணையற்ற உழைப்பு மிக முக்கிய காரணம் என்பது சூர்யாவுக்கு தெரியாததா என்ன..? அதனால் இந்தப்படத்தின் வெற்றிக்காக ஹரியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு புதிய டோயோட்டோ கார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்துள்ளார்.