‘ஏ’ சான்றிதழ் கொடுத்த படத்தை சிரித்தபடி பார்த்த சென்சார் பெண் அதிகாரிகள்..!

hara hara mahadevaki censor
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வரும் செப்-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் ‘ஹர ஹர மகாதேவகி’. 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். “ஏ’ சான்று பெற்ற இந்தப்படத்தை குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். என்றாலும் சென்சார் போர்டில் படம் பார்த்த பெண் அதிகாரிகளும் படத்தை பார்த்துவிட்டு நல்லா ஜாலியா இருக்கு’ என தங்களது கருத்தை கூறியுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

படம் குறித்து இயக்குனர் என்ன சொல்கிறார்..?

புதுமையான ஒன்றை இப்படத்தில் முயற்சித்துள்ளோம். முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம்,. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம்” என்கிறார்.

அப்படியானால் விமர்சனங்கள் கொஞ்சம் கடுமையாக இருக்குமே..?

இயல்பு வாழ்க்கை படமாக்கப்பட்டுள்ளதால் இந்தப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோன்றவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் கூறினர், அதன் தொடர்ச்சியாகவே படம் முழுவதும் இருக்கும். அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது.

சரி அப்படி என்னதான் கதை இந்தப்படத்தில்..?

இப்படத்தின் கதைபற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார். நிக்கி கல்ராணி கல்லூரி மாணவி.. இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்லாம் சந்திக்கிறாங்க அவங்களுக்கு என்னல்லாம் நடக்குது என்பதுதான் கதை. முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும்.

அது என்ன ‘ஹர ஹர மஹாதேவகி’ன்னு டைட்டில்..?

ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது. கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு.

சரி.. கௌதம் கார்த்திக் இந்தப்படத்துக்குள்ள எப்படி வந்தாரு..?

கௌதம் கார்த்திக் உட்பட 18 ஹீரோகளுக்கு இப்படத்தின் கதையை நான் கூறினேன். அவர்கள் அனைவருக்கும் இந்த கதை பிடிக்கவில்லை என்று கூற முடியாது… ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இந்த கதையில் நடிக்க முடியவில்லை”

என படம் குறித்து விலாவாரியான தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சந்தோஷ் ராஜ்குமார்..