ஹேப்பி பர்த்டே ட்டூ ‘தல’..!

Ajith

மே-1 என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று தொழிலாளர் தினம்.. இன்னொன்று ‘தல’ பிறந்தநாள். ஆங்காங்கே நரைத்த தலைமுடி, ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் சிங்கநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’.

உயிரெழுத்து அ வில் ஆரம்பிப்பதுபோல அஜித்தின் உயிரான சினிமா வாழ்க்கையும் அமராவதி என அ’வில் தொடங்கும் படம் மூலம்தான் ஆரம்பமானது. அப்போது பிரசாந்த் வளர்ந்துகொண்டிருந்த நேரம். விஜய் அறிமுகமாகியிருந்த நேரம். அந்தப்படத்தை பொறுத்தவரை அஜித் பிரமாதமாக ஸ்கோர் செய்யாவிட்டாலும் யார் இந்த அழகுப்பையன் என அப்போதே ரசிகர்களின் கவனத்தை தன்மீது திருப்பினார்.

ஆனால் அதன்பின் இந்த 26 வருடங்களில் என்ன ஆகியிருக்கிறது தெரியும் தானே..? எல்லாமே மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி, எதுவும் பேசாமல் இருந்தாலும் செய்தி என தீனி போட்டுக்கொண்டே இருக்கிறார்.. அதுதான் அஜித்தின் பவர் என்கிறார்கள் ரசிகர்கள்.

அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தன்னம்பிக்கையை விரும்புவோருக்கும் அஜித்தை ரொம்பவே பிடிக்கும். இன்று பிறந்தநாள் காணும் அஜித்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது