ஹேப்பி பர்த்டே ட்டூ ‘ரஜினி முருகன்’..!

sivakarthikeyan
தமிழ்சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களில் அபரிமிதமான வரவேற்பு எப்போதாவது ஒருத்தருக்குத்தான் கிடைக்கும்.. அதிலும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோவாக காலூன்றுவது என்றால் குறிஞ்சிப்பூ பூப்பதுபோல அபூர்வமான விஷயம் தான். 15 வருடங்களுக்கு முன் அப்படி வந்தவர் தான் நடிகர் மாதவன். அதற்கு அடுத்த குறிஞ்சிப்பூ சிவகார்த்திகேயன் தான்.

ஒரு நடிகருக்கு திரையுலகில் மட்டுமல்லாது பொதுமக்களிடம் இருந்தும் குறிப்பாக குழந்தைகளிடம் இருந்து வரவேற்பு கிடைப்பது என்பது அபூர்வம். அந்த வகையிலும் சிவகார்த்திகேயன் அதிர்ஷ்டசாலிதான். ஆரம்பத்தில் தனக்கு எந்த கதைகள் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்துவந்தார் சிவகார்த்திகேயன். அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வேல்யூ உருவாகியுள்ள நிலையில் தற்போது இயக்குனர்களின் கையில் தன்னை ஒப்படைத்து அடுத்தகட்டத்திற்கு நகர ஆரம்பித்திருக்கிறார்.

அதிலும் கடந்த வருடத்தில் தனது திரையுலக பயணத்தில் சில தடங்கல்களை சந்தித்த சிவகார்த்திகேயனுக்கு இந்த வருட ஆரம்பத்தை ‘ரஜினி முருகன்’ படம் வெற்றி திலகம் இட்டு துவங்கி வைத்துள்ளது. இன்று பிறந்தநாள் காணும் சிவகார்த்தியனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.