மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

முன்னுரை, முகவுரை எதுவும் தேவையில்லாத கலையுலக மேதை தான் இயக்குனர் மணிரத்னம். உலக அரங்கில் இந்திய சினிமாவின் ஐகானாக பார்க்கப்படுபவர். இந்தியாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் இவரது ஒரு படத்திலாவது தலைகாட்டாவிட்டால் தங்களது வரலாற்று சரித்திரம் பூர்த்தியாகாது என்ற நினைப்பவர்கள் தான்..

வாய்ப்பு கிடைத்தவர்கள் வெற்றி எக்காளமிட, கிடைக்காதவர்கள் வாய்ப்புக்கு தவம் கிடக்கிறார்கள். வசன நடையில் நடைபோட்டுக்கொண்டிருந்த சினிமாவை தடம் மாற்றி மௌனமொழி பேச வைத்தவர் மணிரத்னம். வெற்றி, தோல்வி இரண்டுமே இப்போதும் எப்போதும் அவரை பாதித்த்தில்லை.. அவரது படத்தின் வியாபாரத்தையும் பாதித்ததில்லை. அதுதான் மணிரத்னம்.

நாயகன், தளபதி, மௌனராகம், அஞ்சலி, ரோஜா என அவர் இயக்கிய ஒவ்வொன்றும் படங்கள் அல்ல.. இன்றைய சினிமா உலகின் இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்.. இன்று பிறந்தநாள் காணும் மணிரத்னம் அவர்களுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.