ஹேப்பி பர்த்டே டூ கருணாஸ்..!

karunas
பாலா இயக்கிய ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் கருணாஸ். இடையில் திடீர் என்று ‘திண்டுக்கல் சாரதி’ படம் மூலம் கதாநாயகனாகி, அது கொடுத்த வரவேற்பில் அம்பா சமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் அவை சரியாக போகாததுடன், கருணாஸ் இனி காமெடி கேரக்டர்களில் நடிக்கமாட்டார் என்கிற ரீதியிலும் செய்தியாக பரவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த பொங்கலன்று வெளியான ‘டார்லிங்’ படத்தில் காமெடியில் கலக்கிய கருணாஸ் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவின் ‘மாஸ்’, கார்த்தியின் ‘கொம்பன்’, விஷாலின் ‘கதகளி’ என முன்னணி நடிகர்களுடன் இணைந்ததன மூலம் மீண்டும் இரண்டாவது ரவுண்டில் களைகட்ட துவங்கி இருக்கிறார் கருணாஸ்.

நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் முக்கியமான நபராக இருந்து அதன் வெற்றிக்கு கடுமையாக பாடுபட்டவர்களில் கருணாஸும் ஒருவர். இன்று பிறந்தநாள் காணும், கருணாஸுக்கு, நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.