ஹேப்பி பர்த்டே ட்டூ ஜெயம் ரவி !

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் என்றாலே வெற்றிதானே.. அதையே தனது அறிமுகப்படத்தின் தலைப்பாக வைத்து, தனது பெயரிலும் அதை சேர்த்துக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி.

ஜெயம் படத்திலிருந்து தமிழ்சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையில், அவரை திட்டமிட்டு வழிநடத்தி முன்னணி நடிகராக்கியவர் அவரது அண்ணன் இயக்குனர் ராஜா. ஆரம்பத்தில் காதல் கதைகளில் ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி, பேராண்மை, நிமிர்ந்து நில் போன்ற சமூக பொறுப்புள்ள படங்களில் நடித்து, நடிப்பில் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.

ஜெயம் ரவி, தற்போது பூலோகம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் சுராஜ் இயக்கும் படம் உட்பட 4 படங்களில் நடித்துவருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் ஜெயம் ரவி, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.