ஹேப்பி பர்த்டே ட்டூ அனிருத்..!

 

ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் உருவான ‘3’ படம் மூலம் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, அதில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அடுத்து கடந்தவருடம் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை.. இந்தவருடம் மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி என இவர் இசையமைத்த படங்களின்  பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டாக, இப்போது அனிருத்தின் கிராப் உச்சத்தில் இருக்கிறது..

தற்போது அனிருத்தின் தீபாவளி ட்ரீட்டாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘கத்தி’யில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத். தீபாவளி ரிலீஸுக்கு பின்னர் இன்னும் அதிர வைக்கப்போகிறது ‘கத்தி’. தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் வரிசையில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார் அனிருத். இன்று பிறந்தநாள் காணும் அனிருத்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.