ஹேப்பி பர்த்டே ட்டூ ‘தல’..!

நரைத்த தலைமுடி, ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் சிங்கநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’. அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என எல்லாமே மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தீனிதான்.

சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் இன்று இந்த இடத்தை பிடித்திருப்பதாலேயே அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தன்னம்பிக்கையை விரும்புவோருக்கும் அஜித்தை ரொம்பவே பிடிக்கும். மே-1 என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று தொழிலாளர் தினம்.. இன்னொன்று ‘தல’ பிறந்தநாள்.

இன்று பிறந்தநாள் காணும் அஜித்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.