ஹேப்பி பர்த்டே சுதீப்..!

கன்னட நடிகர் தான்.. ஆனால் தமிழ்நாட்டிலும் இவர்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அவர் தான் நடிகர் சுதீப்.. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பு நாடறிந்த விஷயம்.

சுதீப் இப்போது கன்னடத்தில் பிஸியான ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஹீரோ என்பதையெல்லாம் மறந்துவிட்டு ராஜமௌலி டைரக்ஷனில் தெலுங்கில் ‘பாஹூபாலி’ என்ற சரித்திரப்படத்தில் கொஞ்சநேரமே வந்துபோகும், ஆனால் ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரில் நடிக்கிறார்.

ரஜினியுடன் ‘லிங்கா’வில் நடிக்கிறார். விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த சிம்பிளிசிட்டி தான் சுதீப். இன்னொரு பக்கம் டைரக்ஷன், தயாரிப்பு என தூள்கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.. இன்று பிறந்தநாள் காணும் சுதீப்பிற்கு நமது  behind framess தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.