தமிழ்சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களில் அபரிமிதமான வரவேற்பு எப்போதாவது ஒருத்தருக்குத்தான் கிடைக்கும்.. அதிலும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோவாக காலூன்றுவதும் குறிஞ்சிப்பூ பூப்பதுபோல அபூர்வமான விஷயம் தான். அப்படி வந்தவர்தான் நடிகர் மாதவனும். அதற்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.
ஒரு நடிகருக்கு திரையுலகில் மட்டுமல்லாது பொதுமக்களிடம் இருந்தும் குறிப்பாக குழந்தைகளிடம் இருந்து வரவேற்பு கிடைப்பது என்பது அபூர்வம். அந்த வகையிலும் சிவகார்த்திகேயன் அதிர்ஷ்டசாலிதான். படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
இன்று பிறந்தநாள் காணும் சிவகார்த்தியனுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.