ஹேப்பி பர்த்டே ட்டூ சிம்ரன்…!

சிம்ரன்.. அழகு, நடிப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்றவர். இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்துவிட்டுத்தான் தமிழுக்கு வந்தார். தமிழ்சினிமாவும் இவரை முன்னணி நடிகையாக்கி அழகு பார்த்தது.

இவர் தமிழில் அறிமுகமானபோது ‘ஒன்ஸ்மோர்’, ‘வி.ஐ.பி’, ‘பூச்சூடவா’, என மூன்று படங்கள் இவர் தங்களது அறிமுகம் தான் என உரிமை கொண்டாடிய அதிசயமும் நடந்தது. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் கமலுடனும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தார்.

ரஜினி மற்றும் விக்ரம் இருவருடன் நடிக்கவில்லை என்கிற குறையைத்தவிர இவரது சினிமா பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் சிம்ரன்.

தற்போது சினிமாவில் தனக்கான நல்ல கேரக்டர்கள் தேடிவரும்போது மட்டும் நடிக்க சம்மதம் சொல்கிறார். இன்று பிறந்தநாள் காணும் சிம்ரனுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.