ஹேப்பி பர்த்டே சிபிராஜ்..!

சினிமா என்கிற பள்ளியில் எப்படியும் ‘ஸ்டூடன்ட் நம்பர்-1’ ஆகிவிட வேண்டும் என ஆர்வத்தோடு அறிமுகமானவர்தான் சிபிராஜ். ஆரம்பத்தில் சத்யராஜின் மகன் என்கிற அங்கீகாரத்துடன் வலம் வந்தாலும் அடுத்தடுத்து ‘லீ’, ‘நாணயம்’ படங்கள் மூலம் நடிப்பில் தன்னுடைய திறமையையும் வெளிப்படுத்த தவறவில்லை..

ஆனால் திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக தனது நாலு வருட காத்திருப்பு வீண்போகாதவாறு ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலமாக வெற்றிவாகை சூடியிருக்கிறார் சிபிராஜ்.

இப்போது இன்னும் ஒருபடி மேலாக, அவர் நடித்துவரும் ‘ஜாக்சன் துரை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே தேனாண்டாள் பிலிம்ஸ் அதை வாங்கியிருக்கிறது. சன் டிவி சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றியுள்ளது. ஆக பாதையில் ஏற்படும் தடைக்கற்களை எப்படி படிக்கற்களாக மாற்றுவது என்கிற வித்தையை சிபிராஜ் கற்றுக்கொண்டுவிட்டார்.

இனி சிபிராஜின் திரையுலக பயணம் சீரான வேகத்தில் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று பிறந்தநாள் காணும் சிபிராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.