ஹேப்பி பர்த்டே சந்தானம்..!

santhanam 2101
வடிவேல், விவேக் இருவரின் தேக்கத்தினால் தமிழ்சினிமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை சரியான நேரத்தில் சமன் செய்தார் சந்தானம். கல்யாண விருந்துன்னா அதுல பாயாசம் கட்டாயம் இருக்கணும்.. பாயாசம்னா அதுல கட்டாயம் முந்திரி இருக்கணும்.. அதுமாதிரி இன்றைக்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் சந்தானம் இருக்கணும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.

அந்த அளவிற்கு சந்தானம் தமிழ்சினிமா ரசிகர்களின் மனதில் தனது நகைச்சுவை நடிப்பால் ஆழமாக ஊடுருவியுள்ளார். இன்று சந்தானம் இந்த இடத்தை அடைந்திருப்பதற்கு அவரது கடின உழைப்பும் நகைச்சுவையில் அவரது டைமிங் சென்ஸும் தான் காரணம்..

ஆனால் கடந்த வருடத்தில் இருந்து திடீர் முடிவாக இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என முடிவெடுத்து ‘இனிமே இப்படித்தான்’ என புதிய ரூட்டில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.. அதனால் காமெடியை விரும்பும் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் இழப்புதான்.. இருந்தாலும் ஹீரோவாகவும் தனது பயணத்தை வெற்றிகரமாக அவர் தொடருவார் என நம்புவோம். இன்று பிறந்தநாள் காணும் சந்தானத்திற்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.