ரெஜினாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா. இவர் ஏற்கனவே ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ தான் இவரை பளிச் என அடையாளப்படுத்தியது.

இந்த வருடம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘பவர்’ படத்தில் நடித்த ரெஜினா தமிழில் ‘ராஜதந்திரம்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் ரெஜினாவுக்கு நமது ‘behind frames’ தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.