ஹேப்பி பர்த்டே ராம்கோபால் வர்மா..!

தங்களது படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர்கள் மிகச்சிலரே. அதில் அதிரடி இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தவிர்த்துவிட்டு ஒரு பட்டியலை யாராலும் தயாரிக்கவே முடியாது.

தெலுங்கில் ‘ஷிவா’வையும் தமிழில் ‘உதயம்’ படத்தையும் பார்த்த ரசிகன் இன்னும் வர்மாவின் பிரமிப்பில் இருந்து மீளாமல் கிடக்கிறான் என்றே சொல்லவேண்டும். தாதாயிசம், ஹாரர் – ராம்கோபால் வர்மாவின் படங்கள் எப்போதுமே இந்த இரண்டு தளங்களுக்குள் தான் இருக்கும்.

அண்டர்வேர்ல்டு தாதாக்களை பற்றி இவர் எடுத்திருக்கும் படங்களை வைத்து ஒருவர் பி.எச்.டியே முடித்து விடலாம். குறிப்பாக மேக்கிங்கில் படம் பார்க்கும் ரசிகனை மிரட்டுவது வர்மாவின் ஸ்டைல். இன்று பிறந்தநாள் காணும் ராம்கோபால் வர்மாவுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.