ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி..!

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றவர் ப்ரியாமணி! அதன்பின் பாலுமகேந்திரா, மணிரத்னம் என அடுத்தடுத்து என ஜாம்பவான்களின் படங்களிலும் நடித்தார்.

தற்போது ப்ரியாமணிக்கு தமிழ்சினிமாவில் தான் படவாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படத்திலும் மலையாளத்திலும் கூட சில படங்களிலும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்..

இதுவும் தவிர ஏதாவது ஒரு படத்திலாவது வில்லியாக நடித்துவிடவேண்டும் என்றும் அதற்கான கதையையும் தேடிக்கொண்டு இருக்கிறார் ப்ரியாமணி.. இன்று பிறந்தநாள் காணும் ப்ரியாமணிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.