ஹேப்பி பர்த்டே பார்த்திபன்..!


பொதுவாக பார்த்திபன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக மாறிவிடும்.. அந்தவகையில் தமிழ்சினிமா ரசிகர்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு இயக்குனர்.. நடிகராக பார்த்திபன் இதுவரை தனது இரட்டைக்குதிரை சவாரியை சரியாகவே செய்துவந்திருக்கிறார்.

டைரக்ஷனாகட்டும், நடிப்பாகட்டும் பார்த்திபனுக்கு என ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. அதுதான் அவரை இன்றும் தமிழ்சினிமாவில் ஒரு வெற்றிகரமான நபராக உலாவர வைத்திருக்கிறது. இப்போது கூட தான் இயக்கும் படத்திற்கு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என பெயர் வைத்திருப்பதும், துணிச்சலாக ‘கதையே இல்லை’ என கேப்ஷன் போடுவதும் பார்த்திபன் மட்டுமே செய்யக்கூடிய புதுமைகள்.

இன்று பிறந்தநாள் காணும் பார்த்திபனுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.