ஹேப்பி பர்த்டே நிதின் சத்யா..!

nithin sathya
நிதின் சத்யா ஒரு திறமையான நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘காலாட்படை’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் 2007ல் வெளியான ‘சென்னை-28’ படமும் அதே வருடம் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சத்தம் போடாதே’ படமும் தான் நிதின் சத்யா மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பின.

அதன்பின்னர் ‘பந்தயம்’, ‘முத்திரை’ என சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சுந்தர்.சியின் ‘அரண்மனை’ மற்றும் ‘திருடன் போலீஸ்’ படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தார் நிதின் சத்யா. தற்போது ‘பண்டிகை’ படத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் நிதின் சத்யாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.