ஹேப்பி பர்த்டே ட்டூ முத்துராமன் சார்..!

எளிமையின் உருவம், சாதனையின் மறுவடிவம், ரஜினியின் காட்பாதர், என இயக்குனர் எஸ்.பி.முத்துராமனைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 1973ல் ஆரம்பித்து 1995 வரை கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய சாதனையாளர். சூப்பர்ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து, கமல், விஜயகாந்த் என 94க்கு முன் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கியவர்.

இருந்தாலும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனராக 25 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மட்டும் எப்போதுமே ஸ்பெஷலானாவர். ரஜினியின் 100வது படத்தை இயக்கியதும் இவரே. ரஜினியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

ஏவி.எம்.நிறுவனத்திற்காக பல படங்களை இயக்கிய இவர் இப்போதும் ஏவி.எம்மின் செல்லப்பிள்ளை தான். இவருக்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் தனி அலுவலகம் ஒதுக்கி கொடுத்து அவரை கௌரவித்துள்ளனர் ஏவி.எம் நிறுவனத்தார்.. இன்று பிறந்தநாள் காணும் இந்த சாதனை மனிதருக்கு behind frames பணிவுடன் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறது.