ஹேப்பி பர்த்டே மதி..!

 

இயக்குனர், நடிகர்களை மட்டுமட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்களின் பெயர்களைப் பார்த்துக்கூட படம் பார்க்க வர ஆரம்பித்துள்ளது இன்றைய இளைஞர் கூட்டம். அந்த அளவுக்கு தங்களது திறமையான ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களின் மனதில் தங்களது பெயரை ஆழமாக பதித்துள்ளவர்கள் சிலர்தான். அதில் ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் மதி.

‘புன்னகை தேசம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானாலும் வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் இவரது திறமை பளிச்சிட்டதோடு ரசிகர்களுக்கும் இவரை அடையாளம் காட்டியது. தமிழ் மட்டுமல்லாமல், இந்தி,தெலுங்கிலும் ஒரு ரவுண்டு சென்று தன் திறமையை நிரூபித்தவர் மதி.

கடந்த வருடம் இவரது ஒளிப்பதிவில் தெலுங்கில் ‘ரன் ராஜா ரன்’ என்கிற படமும் தமிழில் சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’, ‘ஜீவா’ படமும் இடம்பிடித்தன. இன்று பிறந்தநாள் காணும் மதி நலமுடன் வாழ நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது