இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் நீண்டகாலம் நீடித்திருப்பது ஒருவகை. ஆனால் நீண்டகாலமாகவே முதல் இடத்தில் இருந்து இறங்காமல் தனது ராஜாங்கத்தை நடத்தி வருவது இன்னொரு வகை.. இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.. அதில் குறிப்பிடும்படியான அரிதான ஒரு குறிஞ்சிப்பூ தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது, நான்கு முறை தேசிய விருதுகள், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட இன்னும் பட்டியலில் அடங்காத பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாம் அளித்திருக்கும் கௌரவம் தான் ‘இசைப்புயல்’ பட்டமும் ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பட்டமும்.

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று 49வது பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.