ஹேப்பி பர்த்டே ட்டு ஞானவேல்ராஜா..!

இன்று தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம். கார்த்தியின் வெற்றிப்பயணத்துக்கு பாதை அமைத்து தருவதையே தனது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருபவர் தான் ஞானவேல்ராஜா. தவிர சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள நல்ல படங்களை இனம் கண்டு அவற்றை வாங்கி விநியோகம் செய்வதிலும் வெற்றிவாகை சூடிவருகிறார்.

மற்றவர்களுக்கு வலிய சென்று உதவும் இவரது பண்பு தான் இவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியிலும் இவரை அமரவைத்துள்ளது. இன்று பிறந்தநாள் காணும் ஞானவேல்ராஜாவுக்கு நமது behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.