ஹேப்பி பர்த்டே அபிஷேக் பச்சன்..!

 

அபிஷேக் பச்சன்.. இந்திய சூப்பர்ஸ்டார் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமிதாப் பச்சனின் வாரிசு. 2௦௦௦ல் ஒரு அகதியாக(Refugee) அடியெடுத்து வைத்தவர் பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நட்சத்திரம். வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்துவிடுவதை தவறாமல் கடைபிடிக்கும் இவர் ஆக்‌ஷன், காமெடி என எல்லா ஏரியாவுக்கும் செட்டாகும் நடிகர்.

மிகுந்த போட்டிகளுக்கிடையே உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ததன் மூலம் இவர்மீது அதிகப்படியான வெளிச்சம் பாய்ந்தது உண்மை. மணிரத்னம் புண்ணியத்தால் தமிழில் மொழிமாற்றமான ‘குரு’படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

அதுமட்டுமல்ல, பாலிவுட்டில் அதிக அளவில் கெஸ்ட் ரோலில் நடித்தது இவராகத்தான் இருக்கும்.. இரண்டு அல்லது மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டுகள் என்றாலும் சரி என சம்மதித்து விடுவது இவரது ஸ்பெஷாலிட்டி.

இன்று பிறந்தநாள் காணும் அபிஷேக் பச்சனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது