மஹா’ நாயகியானார் ஹன்சிகா..!

mahaa - hanshika

தமிழ் சினிமாவில் நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது.

அந்த உந்துதலில் தான், அந்த நம்பிக்கையில் தான் இளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார்.இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது. இந்த படத்திற்கு ‘மெக்கா என தலைப்பு வைக்கப்பட்டு அதை நடிகர் தனுஷ் இன்று அறிவித்தார்.

“இந்த கதையையும் , திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது. மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.