ஜி.வி.பிரகாஷின் ‘முதல் படம்’ மே-13ல் ரிலீஸ்..!

pencil

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ் தான் ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என இரண்டு படங்களில் நடித்துவிடாலும் கூட அவரை முதலில் கதாநாயகனாக்கி அழகுபார்த்த படம் ‘பென்சில்’ தான்..மணி நாகராஜ் என்பவர் இயக்கிய இந்தப்படம் சில காரணங்களால் வெளிவர தாமதாகவே முந்திய இரண்டு படங்கள் முன்னதாக ரிலீஸாகி ஜி.வி.பிரகாஷுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துவிட்டனர்..

இப்போது ஜி.வி.பிரகாஷின் மார்க்கெட் நிலவரம் வலுவாக இருப்பதால் ‘பென்சில்’ படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் தரப்பு இறங்கியுள்ளது. அதன் பலனாக வரும் மே-13ல் இந்தப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.