ஜி.வி.பிரகாஷை வேறு ரூட்டிற்கு திருப்பும் 100% காதல்..!

GVPrakash

தெலுங்கில் நாகசைதன்யா, தமன்னா ஜோடியாக நடித்த 100% லவ் சூப்பர் ஹிட்டாக ஓடியது. தற்போது இந்தப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிக்க தமிழில் 100% காதல் என்கிற பெயரில் ரீமேக்காகிறது. இந்தப்படத்தின் பூஜையில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.. தெலுங்கில் இந்தப்படத்தை இயக்கி, இசையமைத்தது இந்த கூட்டணி தான்.

இயக்குனர் சுகுமாரின் நண்பரான சந்திரமௌலி என்பவர் இந்தப்படத்தை தமிழில் இயக்குகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். விஜய்க்கு எப்படி ஒரு ‘குஷி’ படம் அமைந்ததோ அதேபோல ‘வர்ஜின் பசங்க சாபம் சும்மாவிடாது’ என சொல்லிக்கொண்டு பிளேபாயாக வளம் வரும் ஜி.வி.பிரகாஷுக்கு இந்தப்படம் ஒரு சேஞ்ச் ஓவராக இருக்கும் என்கிறார்கள்.