வரவேற்பை பெற்ற வடசென்னை பாடல்கள்..!

vadachennai songs

பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வடசென்னை’ படத்தில் இணைந்துள்ளனர். டைரக்சன்-நடிப்பில் தான் இவ்வளவு இடைவெளி விட்டார்களே தவிர படத்தயாரிப்பில் இணைந்து காக்க முட்டை, விசாரணை படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய மரியாதையை பெற்றுத்தர தவறவில்லை இருவருமே.

இந்தநிலையில் வடசென்னை படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் தனுஷ். சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர் குமார், பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

காலா, கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வடசென்னை படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது தனுஷ், சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.