கௌதம் மேனனின் ‘தில்’லை பாராட்டியே ஆகவேண்டும்..!

Dhanush-Simbu with gautham menon
சிம்புவை வைத்து, தான் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் கௌதம் மேனன்.. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் ஆரம்பித்துவிட்டார் கௌதம் மேனன்.

இப்போது இரண்டு படங்களுக்குமான பாடல் காட்சிகளை ஒரேசமயத்தில் அடுத்தடுத்து துருக்கியில் படமாக்க திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், தனுஷ், சிம்பு இருவரையும் ஒன்றாக அழைத்துக்கொண்டு துருக்கிக்கு பயணிக்க இருக்கிறாராம்.. சக போட்டி நடிகர்களான சிம்பு, தனுஷை ஏக காலத்தில் வைத்து படம் எடுப்பதே பெரிய விஷயம் என்கிற நிலை இருக்கும்போது, இருவரையும் ஒன்றாக படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்லும் கௌதம் மேனனின் தில்லை பாராட்டியே ஆகவேண்டும்.