படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கௌதம் மேனன்..!

goutham menon birthday 2602
நேற்று கௌதம் மேனனின் பிறந்தநாள் தான்.. ஆனாலும் ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பிற்கு லீவு விடாமல் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டார் கௌதம் மேனன்.. ஆனால் படக்குழுவினர் சும்மா இருப்பார்களா என்ன..? கேக் வரவழைத்து வெட்டி அமர்க்களப்படுத்தி விட்டனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது படத்தின் நாயகன் சிம்பு மற்றும் நாயகி மஞ்சிமா மோகன் ஆகியோரும் உற்சாகமாக கலந்துகொண்டனர். அதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே நேரத்தில் உருவாவதால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கலந்துகொண்டார்.