கொரில்லா டீசரை வெளியிடுகிறார் சூர்யா

gorilla teaser

நடிகர் ஜீவா தற்போது நடித்து வரும் பாடங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ‘கொரில்லலா’.. இதில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்க, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘

இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் டீசரை வரும் செப்-16 அன்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்க்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.