பாங்காங்கை விட்டு புறப்படும் ‘கொரில்லா’..!

ஒரு கொரில்லாவை மையப்படுத்தி உருவாகும் படம் தான் ‘கொரில்லா’. ஜீவா ஹீரோவாக நடித்துவரும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். இவர்களுடன் சதீஷ், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல படத்தில் காங் என்கிற கொரிலாவும் நடித்து வருகிறது.

டான் சாண்டி இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே பாங்காங்கில் நடைபெற்று வந்தது. தற்போது பாங்காங்கில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பை நிறைவு செய்த குஷியில் கொரில்லாவுடன் அசத்தலான செல்பி ஒன்றை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஜீவா.