“தலைவர் வாழ்த்து… தூக்கம் போச்சு..” ; மாநகரம் இயக்குனரின் சந்தோஷ புலம்பல்..!

கடந்த வெள்ளியன்று ‘பொடென்ஷியல்’ நிறுவனத்தின் தயாரிப்பாக அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘மாநகரம்’ படம் வெளியானது.. ரசிகர்களை மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களையும் இந்தப்படம் பிரமிக்க வைத்துள்ளது… திரையுலக வி.ஐ.பிக்கள் பலரும் இந்தப்படத்தை பாராட்டி தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநகரம் திரைப்படத்தை பார்த்தார். படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்த ரஜினி உடனே இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு “கண்ணா.. ஹா ஹா” !!! படம் பார்த்தேன்.. கலக்கிட்டிங்க.. சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க, கலக்குங்க” என தனக்கே உரிய பாணியில் பாராட்டியுள்ளார். என்று கூறியுள்ளார்.

ரஜினியின் படத்தை பார்த்தாலே அன்றைய தினம் சாதாரண ரசிகனுக்கு தூக்கம் வராது… அதிலும் ரஜினி ரசிகரான லோகேஷ் கனகராஜுக்கு அவரே போன் பண்ணி பேசியிருக்கிறார் என்றால் எப்படி இருந்திருக்கும்..? “இன்னிக்கு தூங்கின மாதிரி தான்” என உணர்ச்சி மேலிட தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.