சமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் அந்த மாதிரி சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதோடு குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பித்துள்ளதாம். “ஜாலியான, துள்ளலான ரசிக்ககூடிய பாடலாக உருவாக்குவது தான் எங்கள் ஐடியா. எங்கள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது” என சந்தோஷமாக சொல்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.
இசை அமைப்பாளர் அச்சு பாடலின் தேவையை எளிதாக உணர்ந்து கொண்டு, இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்த பாடலை வழங்ககூடியவர். மணி அமுதவன் எளிதான, அனைவரையும் சென்றடையக்கூடிய பாடல் வரிகளை வழக்கம் போலவே வழங்கியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் லிரிக் வீடியோ எனப்படும் பாடல் வரிகளை கொண்டு வெளியாகும் வீடியோக்களே படத்தை கொண்டு சேர்க்க பயன்படும் ஒரு கருவியாக பயன்படுகின்றன. பாடலை அலங்கரித்து எல்லா வகையிலும் கொண்டு சேர்த்த திங்க் மியூசிக் நிறுவனத்துக்கு நன்றி என்கிறார் விஜய் மில்டன்.
நேரம் படத்தில் இதேபாணியில் தான் க்ளைமாக்ஸ் பாடலை உருவாக்கி இருந்தார்கள். அதுதான் படத்தின் விளம்பரத்திற்கு பயன்பட்டது. சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டன் சிவா உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ரஃப் நோட் ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் பரத் சீனி தயாரித்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.