மார்ச்-29ல் கோலிசோடா 2 ரிலீஸ்..!

golisoda 2 release

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோலி சோடா 2′, ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார் விஜய் மில்டன்.

சமுத்திரக்கனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் நிறுவனம் தற்போது ‘கோலிசோடா 2′ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று இந்தப்படம் வெளியாக உள்ளது.

“விஜய் மில்டன் மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன்” என்கிறார் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் வி.சத்யமூர்த்தி. இதே நிறுவனம் தயாரித்துவரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. .